மலையக தியாகிகள் தினம் மற்றும் உலகத் தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றன.

4 hours ago



மலையக தியாகிகள் தினம் மற்றும் உலகத் தமிழாராச்சி மாநாட்டு படுகொலை 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றன.

தேயிலைச் செடிகளின் நடுவே உழைப்புச் சுரண்டல்களுக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கி அடிமைப்படுத்தப்பட்ட மலையக தமிழ் மக்களினுடைய சமூக அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தம்முயிர் தந்த எம்மவர்களை நினைவேந்தும் மலையக தியாகிகள் தினமும் அனுஷ்டிக்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸாரால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 2025 ஆம் ஆண்டுடன் 51ஆண்டுகள் ஆகின்றன.

இன்றுவரையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்டதொன்றாகவே நீள்கின்றது.

இந்த நிலையில், மலையக தியாகிகள் தினம் மற்றும் 4ஆவது உலகத் தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக பொதுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.


அண்மைய பதிவுகள்