இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரன் சாவித்ர சில்வா மீது கொலை வெறித் தாக்குதல்

3 months ago



இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரன் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 7. 30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலை, பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரத்மலானே சுத்தா என்று அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா மேலும் சிலருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த சாவித்ர சில்வா, மொறட்டுவை லுனாவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்