கனடாவில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட 18 பேர் கைது

5 months ago


கனடாவில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 18 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வீடுகளை உடைத்து கொள்ளையிடல், வாகனங்களை கொள்ளையிடல் உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய திட்டமிட்ட குற்றவாளி கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீல் பிராந்திய பொலிஸார் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளை உடைத்து கொள்ளையிடல், ஆயுதமுனையில் கொள்ளையிடல் மற்றும் வாகன கொள்ளை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக 150 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்ட 18 பேரில் 2 பேர் பதின்ம வயதுடைய சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் சந்தேகநபர்கள் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவங்களின் போது ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடமிருந்து தசம் ஒன்று இரண்டு மில்லியன் டொலர்கள் பெறுமதியான 12 வாகனங்களும், 55000 டொலர் பெறுமதியான ஆடம்பர பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அண்மைய பதிவுகள்