கனடாவில் சுமார் 60 ஆண்டுகளாக மூன்று நண்பர்களுக்கு இடையில் நத்தார் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்பட்டன

2 weeks ago


கனடாவில் சுமார் 60 ஆண்டுகளாக மூன்று நண்பர்களுக்கு இடையில் நத்தார் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றது.

1964ஆம் ஆண்டு முதல் இந்த கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை பரிமாற்றம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கரோல் மற்றும் பொப் காடாஷ் ஆகிய இருவரும் ரிச்சர்ட் சோபார்ட் என்ற நண்பருடன் இவ்வாறு கிறிஸ்மஸ் அட்டை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

முதல் ஆண்டில் இந்த நண்பர்களுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட வாழ்த்து அட்டைகளே மீண்டும் மீண்டும் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த 60 ஆண்டு காலப்பகுதியில் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் துன்பங்கள் ஏற்பட்ட போதிலும் இழப்புக்களை தாண்டி இந்த நண்பர்களுக்கு இடையில் வாழ்த்து அட்டைகள் பரிமாறக் கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.