மட்டக்களப்பு காத்தான்குடியில் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் பொலிஸார் நடத்திய சுத்திவளைப்பு தேடுதலில் கைது

4 hours ago



குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுத்திவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி குற்றத்தடுப்புப் பொலிஸார் மற்றும் போதை ஒழிப்புப் பிரிவினர் குறித்த தேடுதல் நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தனர்.

காத்தான்குடி, புதிய காத்தான்குடி, நாவற்குடா, கல்லடி, புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் இவ்வாறு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 10 பேரும், கசிப்பு விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட 60 பேரும், அதிவேகமாக வாகனம் செலுத்தியமை உட்பட வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 27 பேருமாக மொத்தம் 97 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அண்மைய பதிவுகள்