வடக்கு - கிழக்கில் இருந்து 25 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பிளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு,பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வடக்கு - கிழக்கில் இருந்து 25 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, மூவர் தேசிய பட்டியல் மூலம் தெரிவாகியுள்ளனர்.
இது பாராளுமன்றில் 12 வீத பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது.
10 மாவட்டங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தி இவர்கள் பாராளுமன்றம் செல்கிறார்கள்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2 தேசியப் பட்டியலுடன் 19 பேர் பாராளுமன்றம் செல்கிறார்கள்.
தமிழ்ப் பிரதிநிதிகளில் அதிக வாக்கு பெற்றவர் திருமதி சரோஜா போல்ராஜ். இவர் மாத்தறை மாவட்டத்தில் ஓர் இலட்சத்து 48 ஆயிரத்து 379 வாக்குகளை பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருணநாதன் இளங்குமரன், சண்முகநாதன் பவானந்த ராஜா, ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன், இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன், செல்வத்தம்பி திலகநாதன், ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் ஆகியோரும்.
திருகோணமலை மாவட்டத்தில் சண்முகம் குகதாசன். அருண் ஹேமச்சந்திராவும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறீநேசன், இளையதம்பி சிறிநாத்.கந்தசாமி பிரபுவும்,
அம்பாறை மாவட்டத்தில். சுவீந்திரன் கோடீஸ்வரன்,
நுவரெலியா மாவட்டத்தில் பழனி திகாம்பரம், வேலுச்சாமி இராதாகிருஷ்ணன்,கிருஷ்ணன் கலைச்செல்வி.ஜீவன்தொண்டமான்
பதுளை மாவட்டத்தில் கிட்டினன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் ஆகியோரும்
இரத்தினபுரி மாவட்டத்தில் எஸ்.பிரதீப்,
மாத்தறை மாவட்டத்தில். சரோஜா போல்ராஜூம
யாழ்ப்பாணத்திலிருந்து தேசிய பட்டியல் மூலம் இராமலிங்கம் சந்திரசேகரனும், வவுனியாவிலிருந்து ப. சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.