யாழ்.திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது
2 months ago

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 03ஆம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் (07) குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து ஒரு தொகை நகைகள் மற்றும் பணம் என்பவை மீட்கப்பட்டுள்ளதுடன், 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
