23 வேட்பாளர்கள் மாயம்!தொலைபேசி இலக்கங்களும் போலி என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கை இம்மாதம் 21ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் முன் னிலையாகியுள்ள வேட்பாளர் களுள் 23 பேரின் தற்போதைய நிலை தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை என தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொது மக்களுக்கான கூட்டங்களை நடத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது சுமார் 15 வேட்பாளர்கள் மாத்திரமே எனவும் அறியக் கிடைத்துள்ளது.
அதேபோல், குறித்த 23 வேட் பாளர்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு வழங்கியுள்ள தொலை பேசி இலக்கங்கள் கூட போலி யானவை என தகவல்கள் வெளி யாகியுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது பிரதான நான்கு கட்சிகளும் தமது தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின் றமை தெரியவந்துள்ளது.