யாழ்.ஆனைக்கோட்டையில் நிமோனியா காய்ச்சலால் ஒருவர் சிகிச்சையின் போது நேற்று உயிரிழந்துள்ளார்.
3 weeks ago
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் சிகிச்சையின் போது நேற்று(19) உயிரிழந்துள்ளார்.
யாழ்.ஆனைக்கோட்டை - சாவற் கட்டுப் பகுதியைச் சேர்ந்த குணலிங்கம் குணசேகரம் (வயது-46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு நாள்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அவரது வீட்டில் திடீரென மயங்கியுள்ளார்.
இதையடுத்து. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.