பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கவுள்ளனர்

1 month ago



பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கவுள்ளனர் என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் (NHS England) பணியாற்றும் ஆயிரக் கணக்கானவர்களை பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து NHS அமைப்பின் தலைவராக இருந்த அமண்டா பிரிச்சார்ட், பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட் டிங் கொடுத்த அழுத்தம் காரணமாக பதவி விலகிவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு சர் ஜிம் மேக்கீ என்பவரை வெஸ் ஸ்ட்ரீட்டிங் நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், NHS அமைப்பின் புதிய யுகத்தை உருவாக்க இருப்பதை இலக்காகக் கொண்டுள்ள வெஸ் ஸ்ட் ரீட்டிங், அதற்காக அந்த அமைப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இங்கிலாந்து NHS அமைப்பின் தலைவராக இருந்த அமண்டா பிரிச்சார்டைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை இழக்க இருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்,

அண்மைய பதிவுகள்