
Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கனடா, Five Eyes alliance என்னும் அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடாக இருந்து வருகின்றது.
உளவுத் தகவல்கள் ஒத்துழைப்புக்காக 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், கனடாவுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா,பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாளர்களாக உள்ளன.
இந்நிலையில், வெள்ளை மாளிகை மூத்த அலுவலரும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவருமான பீற்றர் நவாரோ என்பவர், தற்போது கனடாவை Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்த மாதம், அதாவது மார்ச் மாதம் 9ஆம் திகதி தனது பிரதமர் பதவியிலிருந்து விலகும் நிலையில், அடுத்து கனடாவுக்கு என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
