யாழ்.கூட்டத்தில் தமிழ் தேசிய பிரச்சினை இந்நாட்டில் இருப்பதாக ஜனாதிபதி மூச்சும் விடவில்லை எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
யாழில் நடந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பிரச்சினை இந்நாட்டில் இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மூச்சும் விடவில்லை என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஐம்பது பஸ்ஸில் அனுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வந்து கூட்டம் நடத்தினார். சிங்களத்தில் பேசியது அங்கிருந்தவர்களுக்கு விளங்கியிருக்கும்.
ஜனாதிபதி அனுர பஸ்ஸில் ஏற்றமாட்டோம் என சொன்னார்.
தூர இடங்களுக்கு செல்லும் அந்த பஸ்ஸில் ஏறமாட்டோம்.
இந்த தேர்தலின் போது அமைச்சு பதவி பற்றி ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசுகிறார்கள்.
ஜனாதிபதி எனக்கு வெளிவிவகார அமைச்சர் தரப்போவதாக உதய கம்மன்பில சொன்னார்.
2019 ஆண்டு அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.
2022 பாராளுமன்றில் நடந்த ஜனாதிபதி தெரிவில் 3 வாக்குகளை அனுர குமார திஸாநாயக்க பெற்றார்.
அதன் பின்னர் அனுர உரையாற்றிய போது சுமந்திரன் பிரதமராக இருக்க வேண்டும் என உரையாற்றினார். இதனை ஹன்சாட்டை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
எங்கள் கட்சியில் வேட்புமனு கேட்டு கிடைக்கவில்லை என்பதற்காக சிலர் மாம்பழத்தை தூக்கி நடனமாடுகின்றனர்.
96ம் ஆண்டு நீதிமன்றமொன்று தீர்ப்பில் தவராஜா யார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவராஜா ஜக்கிய தேசிய கட்சியின் நிர்வாக சபை உறுப்பினர். தவராஜா தற்போது மானஸ்தர் போல கதைக்கிறார்.
எமது கட்சியில் யாராவது மதுபான சாலை சிபாரிசு செய்தமை தெரிய வந்தால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ஜனாதிபதியாக உள்ளவரின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை எடுக்கும்
வழக்கத்தின்படி தேசிய மக்கள் சக்திக்கு சாதாரண பெரும்பான்மை கிடைக்கலாம்.
யாழில் நடந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பிரச்சினை இந்நாட்டில் இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மூச்சும் விடவில்லை
தமிழ் மக்கள் மாற்றம் என்ற அலையில் மாண்டுபோக கூடாது.
மாற்றம் என்பது தடுமாற்றமாகி உள்ளதாக பத்திரிகை ஒன்று ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஊழல்வாதிகள் அல்ல. ஆனால் தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வில் மௌனம் காக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்தாலும் அது தமிழ் மக்களுக்கு பாரிய பின்னடைவு.
தமிழ் தேசிய அடையாளம், நீண்டகால போராட்டம், எத்தனையோ உயிர்களை கொடுத்திருக்கிறோம் என்பதற்கு பலனில்லை.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை காப்பாற்றுவது இலங்கை தமிழ் அரசுக் கட்சி தான்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல்போன போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறைக்கு வழங்கியது.
சைக்கிள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனம் யாழ்ப்பாணத்திற்கே வழங்கப்பட்டது.
அந்த கட்சிக்கு கிழக்கு மாகாணம் பற்றி கவலையில்லை - என்றார்.