லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே விரும்பத்தக்க நாடாக இலங்கை தெரிவு
2 months ago
லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்கத் தீவு நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத் தக்க தீவுக்கான தங்க விருதை வென்றுள்ளது.
கடந்த வருடம் இந்தப் போட்டியில் 8 ஆவது இடத்திலிருந்த இலங்கை இவ்வருடம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளால் வாக்களிக்கப்பட்டு இந்த விருது இலங்கைக்குக் கிடைத்துள்ளது.
மேலும், அவுஸ்திரேலியா மிகவும் விரும்பத்தக்க நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், டோக்கியோ மிகவும் விரும்பத்தக்க நகரம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது.