இலங்கையில் நேற்று நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் போதைப்பொருள் குற்றம் சார்ந்து 652 பேர் கைது.
7 months ago

இலங்கையில் நேற்று நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் போதைப்பொருள் குற்றம் சார்ந்து 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களில் 9 பெண்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கைதானவர்களில் 8 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், போதைப்பொருளுக்கு அடிமையான இருவரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 119 கிராம் ஹெரோயின், 262 கிராம் ஐஸ், 179 கிலோ கஞ்சா முதலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
