
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து 49 வயதான நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி சுமார் ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
