
தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காக நூலகங்களுக்கு தீ வைக்கப்பட்ட காலம் வரலாற்றில் உண்டு. யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்துக்கும் அதுதான் நடந்தது.
யாழ் பொது நூலகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் முன்வைத்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -
யாழ். நூலகம், யாழ்ப்பாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.
யாழ். நூலகத்திற்கு அத்தியாவசிய வசதிகளை வழங்க 100 மில்லியன் ரூபாய். ஏனைய பிரதேசங்களில் நூலகங்களை அபிவிருத்தி செய்வதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
