பிரிட்டிஷ் கொலம்பிய மாகா ணத்தில் நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.
மாகாணத்தின் கரையோர பகுதிகளில் இவ்வாறு நிலநடுக் கங்கள் பதிவாகின எனத் தெரி விக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த நில நடுக்கங்கள் காரணமாக சுனாமி கனடாவின் வான்கூவர் தீவில் வியாழன் காலை 8.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் அது 6.5ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம், கனடாவின் மேற்குக் கரையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வான்கூவர் தீவிலுள்ள மாவட்டத்திலிருந்து 130 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
சுமார் 2,000 மக்கள் வாழும் Tofinoவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்களில் அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் நில அதிர்வு பதிவாகி 30 நிமிடங்களில் மேலும் ஒரு நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நில அதிர்வு 4.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுப் பகுதியில் கரையோரங்களில் சில நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
நில அதிர்வு நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக காலநிலை ஆயத்த மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் போவின்மா தெரிவித்துள்ளார்.
கனடாவில் வருடம் ஒன்றில் ஆயி ரக்கணக்கான நில அதிர்வுகள் பதி வாகின்றன எனவும் அதில் அனேக மானவை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவாகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி நில அதிர்வு இடம்பெறும் பகுதிகளில் மக்கள் ஆயத்த நிலையில் இருப்பது உசிதமானது என அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.