ரஷ்யா - உக்ரைன் போருக்கு சுமார் 500 இளைஞர்கள் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டனர் என்று குற்றச்சாட்டு
ரஷ்யா - உக்ரைன் போர்க்களத்துக்கு இதுவரை சுமார் 500 இளைஞர்கள் இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் எல்லைக்குக் கடத்திச் செல்லப்பட்டு வலுக்கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பங்கள், தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறுகோரி ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று பேரணி நடத்தவுள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மனுவும் கையளிக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் இதற்கு முன்னர் வெளியாகியிருந்தன.
எனினும், அந்தத் தகவல்களை ரஷ்யா மறுத்திருந்தது.
இலங்கையர்கள் எவரும் ரஷ்ய இராணுவத்தில் இல்லை என்றும் ரஷ்யா கூறியிருந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது 500 பேர் உக்ரைன் ரஷ்யப் போர்க் களத்துக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் பெரும் பரபரப்பான விடயமாக மாறியுள்ளது.
போர்க்களத்துக்குக் கடத்தப்பட்ட இளைஞர்களுக்கு உக்ரைன், ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டதால், அவர்களை மீட்பது சிரமமாக உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியிருந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.