உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கு முருகம்மையார் விருது வழங்கப்பட்டது.

4 months ago


தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கு முருகம்மையார் விருது வழங்கப்பட்டதுடன் தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு -2024 கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் பழநியில் நடைபெற்றது. இதில் சர்வதேச ரீதியிலிருந்தும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 12 பகுதிகளாக 4 ஆயிரத்து 800 பக்கங்கள் கொண்ட முருகன் பாடல் தொகுப்பை அச்சிட்டுப் பதிப்பித்ததற்காகவும், 19 ஆயிரம் பக்கங்களில் 12 திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பித்ததற்காகவும், நூல்கள் இணையத்திலும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் www.thevaaram.org இணையத்தளத்தை அமைத்து தர்மபுரம் ஆதினத்திற்கு வழங் கியமைக்காகவும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் முருகம்மையார் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார்.



அண்மைய பதிவுகள்