இலங்கைக்கு எதிர்காலத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக IMF இன் பணிப்பாளர் தெரிவிப்பு

2 months ago




இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தில் பங்குபற்றிய இலங்கை பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வொஷிங்டன் டிசியில் நடைபெறுகின்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

எதிர்கால நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என கிரிஸ்ட லினா ஜோர்ஜியேவா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்