கனடாவில் வேலையற்றோர் விகிதம் அதிகரிக்கிறது.

6 months ago

கனடா வின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரி வித்துள்ளது.

ஜூன் மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 6.4 சதவீதமாக அதி கரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் வேலையற்றோர் விகிதம் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

கனடிய பொருளாதாரம் ஜூன் மாதத்தில் 1,400 வேலைகளை இழந்துள்ளது.மே மாதம் வேலையற்றோர் விகிதம் 6.2 சதவீதமாக பதிவாகியிருந்தது.

கனடிய மத்திய வங்கி எதிர்வரும் 24ஆம் திகதி, தனது அடுத்த வட்டி விகித முடிவை அறிவிக்க உள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 2023 முதல் வேலையற்றோர் விகிதம் அதிகரித்து வருவதாக புள்ளி விவரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அண்மைய பதிவுகள்