கனடா ரொறன்ரோவில் காரைத் திருடியவரை அறிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவிப்பு.
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் கார் ஒன்று களவாடிச் சென்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பான காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. காரை திருடிய நபர் வேகமாக தப்பி சென்றார் எனப் பொலிஸார் தெரி விக்கின்றனர்.
ரிச்மண்ட் ஹில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேக மாக காரை செலுத்திய நபரை இடை மறித்த பொலிஸார், அவரை இருக்கைப்பட்டி அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இருக்கை பட்டியை அணிந்த நபர். வாகனத்தை நிறுத்தாது வேகமாக தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு வாகனத்தைக் களவாடிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகனத்தை அபகரித்த நபர் தொடர்பிலான விபரங்கள் அறிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.