கனடாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் பேஷ்ட்ரி வகைகளில் 'சல்மொனெல்லா' பாக்டீரியாவின் தாக்கம் காணப்படுவதாக தெரிவிப்பு

2 months ago



கனடாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் பேஷ்ட்ரி வகைகளில் 'சல்மொனெல்லா எனப்படும் பாக்டீரியாவின் தாக்கம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேஸ்ட்ரீ வகைகளை உட்கொண்ட 69 பேர் இந்த நோய் வாய்பட்டுள்ள நிலையிலேயே, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த வகை பேஸ்ட்ரிகளை சந்தைகளில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளதாகவும் பொது மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த செப்டம்பர் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இந்த பேஸ்ட்ரி வகைகளை உட்கொண்ட 69 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவர்களில் 22 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், க்யூபிக் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.