இந்தியா சீனா இணைந்து செயற்பட ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

3 months ago


சீன வெளிவிவகார அமைச்சர்  வாங்யீ மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோர் இடையே ரஷ்யாவில் நடந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிரிக்ஸ்          கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்டத் தலைவர்கள் சந்திப்பு ரஷ்யாவின் செயின்ட் பீற்றர்ஸ் பர்க்கில் நடந்தது.

இந்த பேச்சுகளின் இடையே, வெளி விவகார அமைச்சர் வாங்யீ மற்றும் அஜித் டோவல் ஆகியோர் சந்தித்து, இரு நாடுகளின் எல்லைப் பிரச்சினைகள் குறித்த சமீபத்திய ஆலோசனையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து விவாதித்தனர்.

சீன - இந்திய மக்களின் நீண்டகால நலன்கள், பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இரு நாடுகளின் உறவுகளில் ஸ்திரத்தன்மை முக்கியம் என இரு தரப்பு பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.

இரு நாடுகளின் தலைவர்கள் எட்டிய ஒருமித்த கருத்தை செயல்படுத் தவும், பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தவும், தொடர் தொடர்புகளை பேணவும், இருதரப்பு உறவுகளை                    மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவும் சீனாவும் இந்தியாவும் ஒப்புக்கொண்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மைய பதிவுகள்