பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் இருவரும் யாழ்ப்பாணம் வருகை

5 months ago



யாழ்.அரியாலை சனசமூக நிலையத்தின் 75 ஆவது ஆண்டு விழாவின் ஓரங்கமாக நடைபெறும் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக உலகப்புகழ் பெற்ற பேச்சாளர்களான பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் இருவரும் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர்.

நாளை வியாழன் மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் இவர்கள் பங்கேற்கும் சொற் சமர்களம் இடம்பெறும்.

இந்நிகழ்வில் பாடசாலை விவாத அணிகளில் பங்கேற்போர் மற்றும் பட்டிமன்றங்களில் பங்கேற்போர் பயன்பெறும் வகையில் விவாத மேடையைக் கையாள்வது எப்படி என்ற பொருளில் இருவரும் கருத்துரைகளை வழங்குவர்.

இதில் ஆர்வம் உள்ள இரசிகர்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்