தமிழகத்தில் ஆக்கிரமித்த வாய்க்கால் கட்டடங்களை இடித்த ஆளுநரைப் போல் யாழில் ஒரு அதிகாரி வருவாரா? மக்களில் ஒருவன்

1 month ago



தமிழகம் சேலத்தில் ஒரு இளம் ஆளுநர் ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்கால் கட்டடங்களை இடித்து அழித்த மாதிரி அழிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் ஒரு அதிகாரி பிறந்து வரவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் வாய்க்கால்களை மூடி கட்டடங்கள் கட்டப்பட்டதால் வெள்ளம் ஓட முடியாமல் நிற்கின்றன.

1. யாழ்ப்பாண நகரின் வெள்ள வாய்க்கால்களில் இரு இடங்கள் 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே சிக்கியிருக்கின்றன. 

2.பிரபல நகைக் கடையொன்று தனது வாகனத் தரிப்பிடத்தை பிரதான வாய்க்காலின் மேல் தட்டில் அமைத்துள்ளனர்.

3.யாழ்ப்பாண சந்திரத்துச் சந்திக்கு மேற்கே அடுக்குமாடி கட்டடம் ஒன்று கழிவு வாய்க்காலை முழுமையாக மூடி அமைக்கப்பட்டுள்ளது.

4.பொம்மை வெளியில் கடலிற்கு நீர் வெளியேறும் பகுதியின் ஒரு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

5.யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நீர் ஓடுவதற்கு பாதையின்றி சகல திசைகளிலும் கட்டடங்கள் அமைக்கப்பட்டுவிட்டது.

6.2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைக்கப்பட்ட 10 கட்டடங்களுக்கு கூட மாநகர சபை அனுமதி பெறப்படவில்லை.

7.பலாலி வீதி, ஸ்ரான்லி வீதி, காங்கேசன்துறை உட்பட்ட பெரு வீதிகளில் வாய்க்காலை மூடி வீதிகளை அகலித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை பல இடங்களில் மீள வாய்க்கால்களை நிர்மாணிக்கவில்லை.

8. அதேபோன்று பல்கலைக்கழகம் முதல் பரமேஸ்வராச் சந்தியின் ஊடாக வீதியின் இரு பக்கமும் வாய்க்காலை அமைத்து பழம் வீதி , மணல்தறை வீதிகள் ஊடாக அந்த வெள்ள நீரை பாயவிட்டு அதற்கு அப்பால் வாய்க்கால் எதையும் நிர்மாணிக்கவில்லை.

9.ஒஸ்மாணியாக் கல்லூரி முன்பாக சிறிது தூரம் உள்ள வாய்க்கால் மிகுதி இடத்தில் வாய்க்கால் அமைக்கப்படவில்லை.

10.யாழ்ப்பாணத்தில் குறைந்தது 6 இடங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பற்று செயற்பட்டுள்ளது. 

11.பல்கலைக் கழக பெண்கள் விடுதிக் கட்டடம் குளம் ஒன்றை மூடி அடுக்கு மாடிக் கட்டடமாக நிர்மாணித்துள்ளார்கள்.

12.யாழ்பாணத்திலிருந்த 1,083 குளங்களில் 300 குளங்களை காணவில்லை.

13.குறிப்பாக யாழ்ப்பாண மாநகர மத்தியிலிருந்த 44 குளங்களில் 6 குளங்களை காணவில்லை 

14.இது போதாதென்று மிஞ்சியுள்ள குளங்களும் சுருங்கியுள்ளது.  நான்கு பக்கத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டு குளங்களின் மேல் வீடுகளும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

17ஆலயங்களும் குளங்கள், ஏரிகள், கால்வாய்களை ஆக்கிரமித்துள்ளன.

18.பல இடங்களில் கிளை வாய்க்கால், பிரதான வாய்க்காலிற்கு மேலாக பாதைகள், வாகனத் தரிப்பிடங்கள நிர்மாணிக்கப்பட்டுள்ளது 

19.அதேநேரம் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கட்டடங்களுக்கு வதிவிடச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஆக்கிரமிப்புகள் பலவற்றின் பின்னால் டக்ளஸ் தேவானந்தா போன்ற அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.அரச அதிகாரிகள் இருக்கின்றார்கள்.சில இடங்களில் இராணுவ அதிகாரிகளின் செல்வாக்கும் உள்ளது.

யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக நீண்டகாலம் பணியாற்றிய வேதநாயகனுக்கு மேற்படி தரவுகள் தெரிந்திருக்கும்.

ஆனால் அப்போதெல்லாம் மிக அமைதியாக வேடிக்கை பார்த்து விட்டு தற்போது ஆளுநராக பத்திரிகையில் அறிக்கை விட்டு கொந்தளிப்பதால் என்ன நடந்து விடப் போகின்றது ?????????