முல்லைத்தீவில் இறங்குதுறை இல்லாததால் ரோஹிங்கியா அகதிகள் திருகோணமலை சென்று கேப்பாபிலவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

2 weeks ago



முல்லைத்தீவு மாவட்டத்தில் உரிய இறங்குதுறை ஒன்று இல்லாததால்தான் ரோஹிங்கியா அகதிகள் திருகோணமலை கொண்டு செல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவுக்கு கொண்டுவரப்பட்டனர் என்று முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

மிக நீண்டகாலமாக முல்லைத்தீவு கடல் பிரதேசத்தில் இந்திய இழுவைமடிப்படகு பிரச்சினை காணப்படுகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க கடந்த வாரம் இந்தியாவுக்கு சென்றிருந்தார்.

அங்கு இரு நாட்டு மீனவர் சம்மந்தமான விடயங்கள் ஆராயப்பட்டன.

எனவே, 2025ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய இழுவைப் படகு விடயம் ஆராயப்பட்டு பேசி முடிவெடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.

இந்திய இழுவைமடிப் படகுகள் எங்கள் கடலில் அத்துமீறுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்திய இழுவைமடிப் படகை தடுத்து நிறுத்தினால் தான் எங்கள் பிரதேசங்களில் தடைசெய்யப்பட்ட தொழில்களான சுருக்கு வலை, வெடி வைத்து மீன் பிடித்தல் போன்றனவற்றையும் முற்றாகக் கட்டுப்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடியவாறு இருக்கும் - என்றார்.

அண்மைய பதிவுகள்