இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள உருவாக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு




இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிர மரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன் போதே, இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள உருவாக்கும் தனது விருப்பத்தை சந்தோஷ் ஜா வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பயனுள்ள கொள்கை வகுப்பில் பெண்களின் வகிபங்கை மேம்படுத்துதல், பெண் நாடாளுமன்றக் குழுக்களுக்கு இடையே நெருக்கமான தொடர்பை வலுப்படுத்துதல் ஆகிய துறைகளில் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் குறித்தும் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
