இயந்திரக் கோளாறால் செயலிழந்த வட தாரகை திருத்தப் பணிகளின் பின் மீண்டும் சேவையில் நெடுந்தாரகை சேவையில் ஈடுபடமுடியாத சூழல்

3 months ago



இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்த நிலையில் காணப்பட்ட வட தாரகை திருத்தப் பணிகளின் பின் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும் நெடுந்தாரகைப் படகு நங்கூரமின்றி சேவையில் ஈடுபடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குறூஸ் தெரிவித்துள்ளார்.

வடதாரகை நேற்றுமுன்தினம் (08) முதல் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

அதேவேளை கடந்த சீரற்ற காலநிலையின் பொழுது நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் கடலில் காணாமற் போயுள்ளது.

இதன் காரணமாக நெடுந்தாரகை தற்காலிகமாக சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

நங்கூரம் கண்டெடுக்கப்படவில்லை எனில் புதிய நங்கூரம் ஒன்றைக் கொள்வனவு செய்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை இதுதொடர்பில் இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய, நங்கூரத்தைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.