இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய 780 மில்லியன் டொலர் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு
5 hours ago
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 780 மில்லியன் டொலர் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பூர்த்தியாக்கப்பட்ட திட்டங்களுக்கு 390 மில்லியன் டொலரும். செயற்படுத்தப்பட்டு வரும் சில திட்டங்களுக்கு 211 மில்லியன் டொலரும், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கென 65 மில்லியன் டொலரும் சமிக்ஞை விளக்குகளுக்கென 14.9 மில்லியன் டொலரும் இந்தியாவால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.