மதுபோதையில் சைக்கிளில் பயணித்தவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்.மல்லாகம் நீதிமன்றத்தால் தீர்ப்பு

3 months ago



மதுபோதையில் சைக்கிளில் பயணித்தவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து மல்லாகம் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.அச்சுவேலிப் பொலிஸாரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

'தூய இலங்கை' திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட ஏற்பாட்டுக்கமையவே அவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கமாக மோட்டார்சைக்கிள் மற்றும் வாகனங்களில் (சைக்கிள் தவிர்ந்த) பயணிப்போர் மதுபோதையில் வாகனம் செலுத்தினாலேயே அவர்களுக்கு பெருந்தொகை பணம் தண்டமாக விதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மது போதையில் சைக்கிளில் பயணித்த ஒருவருக்கும் பெருந்தொகை தண்டமாக விதிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் மிக்க விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

அண்மைய பதிவுகள்