
விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக மண்ணெண்ணெயை எடுத்து அருந்திய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஷ்வின் என்ற 14 மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாயார் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, கட்டிலுக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை எடுத்து அந்தக் குழந்தை அருந்தியதுடன், தனது உடலிலும் ஊற்றி விளையாடியுள்ளது.
சிறிது நேரத்தில் குழந்தை மயக்க முற்றதைப் பார்த்த குடும்பத்தினர் கோப்பாய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது குழந்தை உயிரிழந்துள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
