அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Spruance' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
8 months ago





அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Spruance' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (ஆகஸ்ட் 19, 2024) குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையின் வரவேற்புடன் கொழும்பு துறைமுகத்திற்கு நங்கூரமிடப்பட்ட Arleigh Burke-class destroyer 'USS Spruance' கப்பலானது நூற்று அறுபது மீற்றர் (160) நீளம் கொண்டுள்ளதுடன் மொத்தம் முந்நூற்று முப்பத்தெட்டு (338) பணியாளர்களைக் கொண்டு இயக்கப்படுகிறது.
மேலும், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், 'USS Spruance' என்ற கப்பல் 2024 ஆகஸ்ட் 20 அன்று நட்டை விட்டு புறப்பட உள்ளது.
ஜிகாபிட் ஈதர்நெட் டேட்டா மல்டிபிளக்ஸ் சிஸ்டம் (GTEMS) பொருத்தப்பட்ட அமெரிக்க கடற்படையின் அழிப்பான் கப்பல்களில் இது முதன்மை பெருகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
