ஆவா குழுவினர் என்று சந்தேகிக்கப்படும் இருவர் உட்பட நால்வரை கொழும்பு மட்டக்குளியில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 month ago




ஆவா குழுவினர் என்று சந்தேகிக்கப்படும் இருவர் உட்பட நால்வரை கொழும்பு மட்டக்குளியில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு - மட்டக்குளி பிரதேசத்தில் ரோந்து சென்ற பொலிஸார் நால்வரை கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.

மற்றைய இரு சந்தேக நபர்களும் கடந்த ஒக்ரோபர் மாதம் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

டுபாயில் உள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட ‘ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவரையும் திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது.

மேற்படி 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவர் துபாயில் உள்ள ஒருவருக்கு 'ரிக்ரொக்' செயலி மூலம் மிரட்டல் விடுத்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

அண்மைய பதிவுகள்