வடமராட்சி அல்வாயில் ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்த போது திடீரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா வயது 32 என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.