கடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டு புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.
கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பான்மையான உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டு புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா. ஹரின் பெர்னாண்டோ. ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய. சன்ன ஜயசுமன, பவித்திரா வன்னிஆராச்சி, சாகல ரத்நாயக்க ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தோல்வி அடைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான உதய கம்மன்பில, நிமல் லன்சா. பிரசன்ன ரணவீர, அஜித் ராஜபக்ச, அருந்திக்க பெர்னாண்டோ, ஜானக்க வக்கும்புர, பிரேமலால் ஜய சேகர, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
அதேவேளை முன்னாள் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), அங்கஜன் இராமநாதன், மனோகணேசன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான காஞ்சனா விஜய சேகர, மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன, ஷசீந்திர ராஜபக்ச உட்படப் பலர் தோல்வி அடைந்துள்னர்.
அதேவேளை கடந்த அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகித்த வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்தகுமார் ஆகியோர் பதுளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க. எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் அநுராதபுரம் மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.