இலங்கையில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவிப்பு.

3 months ago


இலங்கையில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது முற்றாக தடை செய்யப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் சட்டத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்.

இதேவேளை, யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், குழுவாக கூடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.