போலி தொலைபேசி அழைப்புகளின் ஊடாக நிதி மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியது.-- பொலிஸார் தெரிவிப்பு
போலி தொலைபேசி அழைப்புகளின் ஊடாக இடம்பெறும் நிதி மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு அவற்றின் முகாமையாளர், சிரேஷ்ட அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் விபத்துக்களில் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் பயணித்த வாகனங்களை திருத்துவதற்காக ஒரு தொகை பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்து மோசடிகள் இடம்பெறுவததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்காக அவசரமாக 10,000 வைப்பிலிடுமாறு தெரிவித்து தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறு 09 டிப்போக்களுக்கு போலி தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது அவை உயிரிழந்தவர்களின் அல்லது வெளிநாட்டவர்களுக்கு சொந்தமானதென தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.