ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ரூக் தலைமையில் கூட்டத் தொடர் ஆரம்பமானது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடரில் காலநிலை மாற்றம், பலஸ்தீன போர், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
நேற்று ஆரம்பமான 56ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை பெறவுள்ளது.
இதேவேளை, இலங்கை தொடர்பான விவகாரம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள 57 ஆவது கூட்டத்தொடரிலேயே எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.