இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த வருடத்தின் செப்ரெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இவற்றுள் 811 முறைப்பாடுகளை விசாரணை செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழு உத்தரவிட்டுள்ளதுடன் சுற்றிவளைப்பில் 67 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 20 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர்.
கிடைத்த 620 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைந்துள்ளதால் அவை குறித்த நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.