வடமராட்சியில் மூன்று நாள் நீடித்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1 month ago
வடமராட்சியில் மூன்று நாள் நீடித்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மண்டபக்காடு, கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறைச் சேர்ந்த கனகன் சண்முகம் (வயது- 62) என்பவராவார்.
காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அவரினால் நடக்க முடியாத நிலையில் காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம்மரணம் தொடர்பில் வல்வெட்டித்துறை பதில் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார்.
சாட்சிகளை வல்வெட்டித்துறை பொலிஸார் நெறிப்படுத்திய நிலையில் சடலம் உடற் கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.