யாழ்.தாவடிச் சந்தியில் வீதியோரம் 5 தினங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் பொலிஸாரிடம் முறையீடு

2 months ago



யாழ்ப்பாணம், தாவடிச் சந்தியில் வீதியோரம் அநாதரவாக 5 தினங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்           வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் தாவடிச் சந்திக்கு அருகே 5 தினங்களாக ஓர் கார் வீதியோரம் அநாதராவாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகப்            பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காரின் இலக்கம் மற்றும் புகைப்படங்களை சேகரித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சகல கதவுகளும் பூட்டப்பட்டுள்ளமையால் காரைப் பொலிஸாரினால் எடுத்துச் செல்ல முடியவில்லை.

இருந்த போதும் 5 தினங்களுக்கு முன்பு இந்தக் காருடன் ஒரு பெண் காணப்பட்டார் எனக் கூறப்படுகின்ற போதும் காரின் உரிமையாளர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அண்மைய பதிவுகள்