யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நபர் ஒருவர் காவலாளியை கடித்த சம்பவமொன்று இடம்பெற்றது.

2 weeks ago



யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப் படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றது.

மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை மருத்துவமனை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இதையடுத்து குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.