2024 ஜனாதிபதி தேர்தல் பிற்பகல் 2 மணி 48.95 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
3 months ago
2024 ஜனாதிபதி தேர்தல் மக்கள் வாக்களித்து வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் முற்பகல் 10 மணிக்கு 20 வீதம் நண்பகல் 12 மணியளவில் 35 வீதம் பிற்பகல் 2 மணி 48.95 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள நிலையில் பிற்பகல் 2 மணி வரை 48.95 வீதம் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் வன்முறையில் 3 சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது அந்த சம்பவங்கள் சட்ட விதிமுறைக்கு மீறிய செயற்பாடாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.