2020 ஓகஸ்ட் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 2024 செப்ரெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 167 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அரசாங்க சட்டங்கள் மொத்தமாக 146, தனியார் உறுப்பினர் சட்டங்கள் 21 ஆகும்.
இதற்கமைய 2023ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம், 06ஆம் இலக்க பாராளுமன்ற வரவு-செலவுத் திட்ட அலுவலக சட்டம், 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டம், 21ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட் டம், 28ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டம், மற்றும் 2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டம், 36ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம், 37ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டம், 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் சட்டம், 45ஆம் இலக்க பொருளாதார நிலைமாற்றம் சட்டம் உள்ளிட்டவை இக்காலப் பகுதியில் நிறைவேற் றப்பட்ட குறிப்பிடத்தக்க சட்டங்களாகும்.