யாழ்.பருத்தித்துறை ஹாட்லி மைந்தர்களின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று இன்பசிட்டி கடற்கரையில் நடைபெற்றது

யாழ்.பருத்தித்துறை ஹாட்லியின் மைந்தர்களின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று வடமராட்சி - இன்பசிட்டி கடற்கரையில் நினைவேந்தப்பட்டது.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களான பூரணமூர்த்தி - கந்தர்வன், சிவநாதன் - இரவிசங்கர், சுந்தரலிங்கம் - சிவோத்தமன், பாலகிருஸ்ணன் - பிரதீபன் ஆகியோர் கடந்த 1999 நவம்பர் 17ஆம் திகதி இன்பசிட்டி கடலில் கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தனர்.
இதேபோன்று, பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது ரயில் விபத்தில் உயிரிழந்த மரியரட்ணம் - குணரட்ணத்தின் 20ஆவது ஆண்டு நினைவுதினமும் அனுஷ்டிக்கப்பட்டது.
கடற்கரையில் உயிரிழந்த மாணவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு படையலிட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்களின் குடும்பத்தினர், அவர்களின் நண்பர்கள் உறவினர்கள், ஹாட்லி கல்லூரி அதிபர் த.கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஹாட்லியின் மைந்தர்களின் நினைவாக இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பாட சாலை மண்டபத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
(-02)
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
