கனடாவின் எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் கடுமையான சட்டம் அமுல்படுத் தப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகள் ஊடாக கனடாவிற்குள் பிரவேசிக்கும் வெளி நாட்டு பயணிகள் தொடர்பில் கூடு தல் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
கனடாவிற்குள் பிரவேசிக்க முயற் சிக்கும் வெளிநாட்டவர்கள் பலர் திருப்பி அனுப்பப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு விவகாரங்கள் தொடர்பில் கனடிய மத்திய அரசாங்கம் மீது அண்மைய நாள்களாக விமர் சனங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பிரவேசிப்பது கடுமை யாக்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்களின்றி நாட் டுக்குள் பிரவேசிப்பவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மாத காலப்பகுதியில் சரா சரியாக சுமார் 4,000 வெளிநாட்டு பயணிகள், கனடிய எல்லைப் பகுதிகளில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.