இலங்கை மாகாணசபைத் தேர்தல் விவகாரம், இந்தியா அழுத்தத்தை வழங்கவில்லை --ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

இலங்கை மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா எந்தவொரு அழுத்தத்தையும் வழங்கவில்லை. ஆனால், மாகாணசபைத் தேர்தலை நடத்தி மாகாண அதிகாரங்களை உரிய தலைமைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன் என்று ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
மாகாணசபை தேர்தல் விடயத்தில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.
அனைத்துக்கும் அப்பால், மாகாண சபைத் தேர்தலை நடத்தி மாகாண அரசியல் தலைமைத்துவத்தை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.
மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் எதையும் பிரயோகிக்கவில்லை. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதிர்வரும் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டிருந்தோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே நாங்கள் செயற்படுவோம்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுடன் இணக்கமாகவே செயற்படுவோம்.
ஏனெனில், புறக்கணிக்கப்பட்ட அரசியல் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகளை நாங்கள் கடைப்பிடிக்கவில்லை - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
