தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம் திகதி முடிவு. மாவை சேனாதிராஜா தெரிவிப்பு.

5 months ago


ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முன்னர் அக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான அரியநேத்திரன் பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.