ரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோக பூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்கள் ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்தபோது உக்ரைன் பாதுகாப்புப் படையின ரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரி வித்துள்ளது.